பூங்கார்
அரிசி உண்பதால் ஏற்படும் பயன்கள்
உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை
வெளியேற்றும் தன்மை கொண்டது.
மருத்துவக் குணம்கொண்ட இந்த இரக
அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவும்
குறையும்.
தொடர்ந்து
சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும்
ஆரோக்கியமாக இருக்கும்.
குழந்தைகளுக்குத்
தேவையான தாய்ப்பால்நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம்
நீடிக்கும்.
கர்ப்பிணிகள் ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்
பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும்.
இந்தக் அரிசி கஞ்சியுடன், தேங்காய் பாலை சேர்த்து, கர்ப்பிணிகளும் பருகலாம்.
மூன்று ஆழாக்கு பூங்கார் அரிசி, ஒரு ஆழாக்கு கறுப்பு உளுந்து, சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, மாவாக ஆட்ட வேண்டும்.
இந்த அரிசியை அனைத்து வயதினரும்
சாப்பிடலாம். குறிப்பாக, நோயுற்றவர்களும் கூட, இந்த அரிசி உணவை எடுத்துக் கொள்ளலாம். காலையில், இட்லி, தோசை, இடியாப்பம், கஞ்சி, புட்டு உள்ளிட்ட வற்றையும்; சாதமாக மதிய வேளையிலும்;
இரவில், இட்லி, தோசை, இடியாப்பமாக செய்து சாப்பிடலாம். எந்த ஒரு பக்க
விளைவையும் தராத அரிசி இது.
எந்த வகையான பாரம்பரிய அரிசியாக
இருந்தாலும், இரண்டு முறை கழுவிய
பின், எட்டு மணி நேரம் ஊற
வைக்க வேண்டும்.
Comments
Post a Comment