நன்மைகள்
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.
இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது.
உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
தேங்காய் எண்ணெயை ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
ஒருவர் தினமும் காலையில் 1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவைக் குறைக்கும்
ஒருவரது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சிறப்பான வழிகளுள் ஒன்று தேங்காய் எண்ணெயைக் குடிப்பது.
தேங்காய் எண்ணெயை அன்றாடம் இரவில் தூங்கும் போது, தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்து இந்த பழக்கம் வழக்கமாக இருந்து வருகிறது.
உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.
![]() |
Comments
Post a Comment