கேழ்வரகு மிக
அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. கேழ்வரகில் ‘பி’
காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்து
உள்ளது.
மருத்துவ
குணங்கள் :
மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும்
ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறையவும், இரத்தத்தில்
கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது. கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரைநோயாளிகளுக்கு உத்தமம். உடலின் தேவையற்ற
கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால்
இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு
கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல்
பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண
வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலை உருவாகிறது.
வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு
உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம், பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு
அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும்
மேற்கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண
வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும்
பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க
முடிகிறது.
கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை
குளிரச்செய்யும்.
பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை
வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு
வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
தாய்ப்பால் அருந்தும் வயதில்
இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும்
கேழ்வரகினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம்
சுரக்கும்.
Comments
Post a Comment