அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர்
சீரக சூரணத்தை வேளைக்கு ஒரு
கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர பித்த வாயு நீங்கும்.ஒரு கிராம் சீரகப்பொடியை
வெல்லத்துடன் சேர்த்து உண்டால் விக்கல் நிற்கும்.சீரகத்தை சம அளவு நாட்டுச்
சர்க்கரையுடன் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை வேளைகளில்
சாப்பிட்டு வர உதடு வெடிப்பு, உதட்டுப் புண் குணமாகும். பித்தம், வாயு, உதிரச்சிக்கல் தீர
சீரக சுரணத்தை ஒரு கிராம் அளவு எடுத்து தேன், பாலுடன் கலந்துப் பருகி வந்தால் குணம் பெறலாம்.

Comments
Post a Comment