Skip to main content

அதிமதுரம் பொடி


ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிமதுரம் அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது

அதிமதுரத்தின் மருத்துவபயன்கள்.

1  கரு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் 
2 . ஆண்மைபெருக
3 .வரட்டுஇருமல் நீங்க
4. கல்லடைப்பு நீங்க
5. தாய்ப்பால் பெருக
6 .பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
7. சுகப் பிரசவத்திற்கு.
8. வழுக்கையில் முடிவளர
9. வயிற்றுப்புண் குணமாக
10. மலச்சிக்கல்  குணமாக

அதிமதுரம் பொடி பயன்படுத்தும் முறை :

               நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
   
         அதிம துரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில்  போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.

             அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி  தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

            அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் வளர ஆரம்பிக்கும்.

            போதியளவு தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு, ஒரு கிராம் அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து, சிறிதளவு இனிப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்
..
             அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
.



Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.