Skip to main content

கஸ்துரி மஞ்சள் பொடி


கஸ்துரிமஞ்சள் பொடியின் நன்மைகள்
     
நுரையிரல் சமந்தமான நோய்கள் நீங்க :     
                 கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்
நுரையீரல் சம்பந்தமான நோய்கள்  நீங்கி விடும்

தொண்டையில் சளி அடைப்பு தீர:
                சளியினால் தொண்டை அடைப்பு  ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்
வயிற்றுவலி நீங்க;
                     கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும்

 அம்மை நோய் தழும்புகள் மறைய :
                        கஸ்துரி மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

வீக்கங்கள் கட்டிகள் நீங்க :
                              கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கம் குறையும்.

முகத்தை பளபளப்பாக :
                  கஸ்துரி மஞ்சளையும் பூலான்கிழங்கையும் கலந்து முகத்தில் பூசி வந்தால்முகம் பளபளாப்பக இருக்கும். தினமும் பயன்படுத வேண்டும்
      கஸ்துரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும் முகசுருகங்கள் நீங்கும்.பருக்கள் சூடுகட்டிகள் காயங்கள் குணமடையும்

குழந்தைகளுக்கு
                  கஸ்தூரி மஞ்சள் ,ரோஜா இதழ், சந்தனக்கட்டை செஞ்சந்தனம் பாசிப்பயறு ,ஆவாரம் பூ இதழ், எலுமிச்சை இலைக்கொழுந்து
வேப்பிலைக் கொழுந்து   இவை அனைத்தையும் அரைத்து பொடி பண்ணி வைத்துகொள்ளவேண்டும்
தினமும் குழந்தையைக் குளிப்பாட்டும்போது, இந்தப் பொடியில் சிறிது எடுத்து, தண்ணீர் சேர்த்துக் குழைத்துக் குளியல் பொடியை நன்கு தடவி குளிப்பாட்டவும். ஆண் குழந்தைகளுக்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.
 இந்தப் பாரம்பர்ய குளியல் பொடியை, மூன்று வயதுவரை குழந்தைகளுக்குப் பயன்படுத்தி வர, சரும தொந்தரவுகள் அண்டாது. மேனி பளபளக்கும்.

          கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.
https://bogarangadi.com/bogarshop/herbal-products/kasturi-manjal-wild-turmeric-powder/






Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.