கருங்குறுவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப்போனாலும் பிறகு
முளைக்கும் திறன் உடையது. நெல் தானியமணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.
கருங்குறுவைஅரிசியின் நன்மைகள்:
கருங்குறுவையின் அரிசியில் “குஷ்டம்” எனப்படும் வெண் புள்ளி, மற்றும்
விசக்கடியால் ஏற்படும்
பக்கவிளைவுகள் போக்கும் சக்தி உடையது.
உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ள, கருங்குறுவையின் அரிசி
ஒரு
பங்கும், தண்ணீர்
மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம்
வைத்திருந்தால் அது பால்போல் மாறி, ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும்
இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்திபேதி (காலரா)
குணமடையும் என
கூறப்படுகிறது.
கருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால்,
மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை)
(செய்யப்படுகிறது,
அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக்
(குணப்படுத்தும்
பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது
Comments
Post a Comment