விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் பல்வேறு மருத்துவ குணநலன்கள் உண்டு. இது
பழங்கால எகிப்தில் கண் எரிச்சல் மற்றும்
இயற்கை சரும நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ
குணநலன்கள்
ரத்த ஓட்டத்தை
அதிகப்படுத்தும்
முகப்பருவை
குணப்படுத்தும்
குடலை
சுத்தப்படுத்தி மலச்சிக்கலை நீக்கும்
ஹார்மோன்களை
சமன்படுத்தி ஆண்மையை அதிகப்படுத்தும்
தோல் தோற்று
நோய் மற்றும் புண்ணை குணப்படுத்தும்
வயிற்றுப் புண்
நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும்,
வயிற்றுப்
பூச்சிகள் வெளியேறும், உடலுக்கு
குளிர்ச்சி தரும்.
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக்
கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு
ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல்
வயிற்றுவலியை ஏற்படுத்தும். அப்போது அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவி அதன்மீது
ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு
ஏற்பட்டு வயிற்று வலி குறையும்.
பருவமடைந்த பெண்களுக்கு வெறும்
வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான
கேளாறுகளை சரி செய்யும்.
Comments
Post a Comment