ஆஸ்துமா
குணப்படுத்த
சித்தரத்தை, அதிமதுரம்,
தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து
பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.
எலும்பை பலபடுத்தும்
சித்தரத்தை மற்றும்
அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர. எலும்புகளின் ஆற்றல்
மேம்படும்.
வறட்டு
இருமலை தணிய
சிறிதளவு
சித்தரத்தையை, எடுத்து மூன்று தம்ளர்
தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து
வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் வறட்டு இருமலை தணியும்
அல்சர் புண்கள் குணமாக
சித்தரத்தை பொடியை நீரில் போட்டு
நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து
பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர்
புண்கள் குணமாகும்.
வாந்தி குமட்டல் நீங்க
உலர்ந்த சித்தரத்தை துண்டு ஒன்றை
எடுத்து, வாயில் இட்டு சுவைக்க நாக்கில்
காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை ஏற்பட்டு சுரக்கும் உமிழ்நீரை அப்படியே
விழுங்கினால் குமட்டல், பாதிப்புகள்
நீங்கும்.
மூட்டு வாத பிரச்சனைகள் நீங்க
சித்தரத்தை தூளை நீரில் கலந்து இரவு
முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின்
வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் வரும்
கிருமிநாசினி
சிறு குழந்தைகள் மற்றும் தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தினமும் சிறிது சித்தரத்தை கலந்த நீரை பருகுவதற்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடலில் இருக்கும் கிருமி அழிந்து உடல் நலம் தேற பெறுவார்கள்.
Comments
Post a Comment