ஜாதிக்காய் நன்மைகள்
ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து
கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு
கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.
ஜாதிக்காய் பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு கூடுகிறது
ஜாதிக்காய் பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு கூடுகிறது
ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், முதலியவற்றைக்
கட்டுப்படுத்தும்
ஜாதிக்காயை
லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை
காலை, மாலை பசும் பாலில்
காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும்.
நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை
அதிகரிக்கும்.
ஜாதிக்காயை
சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும்
பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்.
அம்மை நோயின்
போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது
எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும்
மன அழுத்தத்தை
போக்கும் வல்லமை கொண்டது தான் ஜாதிக்காய் பொடி. இதை பாலுடன் கலந்து குடிக்க நல்ல
புத்துணர்ச்சியை பெறலாம்.
ஜாதிக்காயில் கால்சியம்
சாத்துக்கள் இருப்பதால் எலும்புகள் வலிமையடையும்.
Comments
Post a Comment