கைக்குத்தல் அரிசியானது பழுப்பு அரிசி
எனப்படும்.
வெகு குறைவான தோல் நீக்கப்பட்டு. மிதமான பழுப்பு
நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை
கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக
இருக்கும்.
மருத்துவகுணங்கள் :
கைக்குத்தல்
அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான
சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது.
அரிசியில்
அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல்
பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய்
வராமல் தடுக்கலாம்.
கைக்குத்தல்
அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு
எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது
கைக்குத்தல்
அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது.
இந்த அரிசியில் எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.
நார்ச்சத்து
அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசி இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
கைக்குத்தல்
அரிசிச்சோறு சாப்பிட்டால்,
இரத்த அழுத்தம் குறையுமாம். மேலும் இரத்தக் குழலில் பிளேக்
உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க
முடியும்
. கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது.
. கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம்
நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறையும்.
கைக்குத்தல் அரிசி
போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு
பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது
கைக்குத்தல்
அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.
Comments
Post a Comment