குழந்தைப் பிறந்த பிறகு அதன் ஒவ்வொரு வளர்ச்சி
கட்டங்களும் பெற்றோர்களுக்கு மைல்கல். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான கட்டம்தான்
குழந்தை எழுந்து நின்று நடைபழகும் தருணம்.
நம் முற்காலத்தில் பயன்படுத்திய ’மர நடைவண்டி’ அதுதான் மிகச் சிறந்த நடைபயிற்சி கருவி .அந்த அழகிய மர நடைவண்டியை நாடுவது சால சிறந்தது. அதைப் பயன்படுத்துவதினால் குழந்தை தனது பாதத்தை பூமியில் நன்றாக ஊன்றுகிறது.
கீழே விழுந்துவிழுந்து எப்படி எழுவது என்பதைக் கற்றுக் கொள்கின்றது. நடைவண்டியின் மேல்பகுதியை இறுகப்பற்றிக் கொள்வதால், தன் கைகளின் பலத்தை உணருகிறது. விரைந்து நகரும் வண்டியை இயக்குவதன் மூலம் குழந்தை வேகத்தினை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுகொள்கிறது.


Comments
Post a Comment