அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்
நீண்ட ஆயுள்பெற :
அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து
பயன்படுத்தினால் நீண்ட ஆயுள் பெறலாம்
வீக்கம்
குறைய
அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு
அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் குறையும்
.
நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என
சேர்த்து, காலையும்
மாலையும் பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல்
வன்மை பெறும்.
ஆண்மை பெருக
அமுக்குரா கிழங்கு சூரணத்தை 10 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு
வர ஆன்மை பெருகும்.
நல்ல தூக்கம் வர
அமுக்குரா கிழங்கு வேர்
எடுத்து நன்கு இடித்து வைத்து கொள்ள வேண்டும். தினந்தோறும் 5 கிராம் வீதம் எடுத்து இரவு உணவிற்கு பிறகு பசும்
பாலில்கலந்துகுடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும்
வயிற்றுவலி,
வயிற்றுபுண் குணமாக
அதிமதுரம் பொடி 100கிராம், சீமை அமுக்கூரம்
பொடி 100 கிராம் இதனை கலந்து ஒரு கரண்டி வீதம் தினம் 3
வேளை ஆகாரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வர வயிற்றுவலி,
வயிற்றுபுண் மாறும்.


Comments
Post a Comment