நன்மைகள்
கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி
வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த கடலை எண்ணெய் தான் சமையலில் அதிகம்
பயன் படுத்தப்படும் எண்ணெய் ஆகும்சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக
இருக்கும். கடலை எண்ணெய் தான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய்.
கடலை எண்ணெய் அதிக
ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரி சக்தி
கிடைக்கிறது.
பூரிதமான
கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான
கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் உதவுகிறது.
கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ' அதிகம் உள்ளது.
முப்பது வயதை கடந்த பலருக்கும் கடின உடலுழைப்பினாலும், உடலின் தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலின் அனைத்து
மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. சிறிதளவு கடலை எண்ணையை வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு
தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே
மூட்டு வலி நீங்கும்.
கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டது
கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டது
. செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கால்
பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட மலச்சிக்கல் பிரச்சனை
கொண்டவர்கள் கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்த
பலனளிக்கும்.:
450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப
நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது.
கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள்
செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.
நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல
நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.


Comments
Post a Comment